Monday, July 27, 2026
Tuesday, July 21, 2026
Saturday, July 18, 2026
Thursday, July 16, 2026
Wednesday, July 15, 2026
Tuesday, July 14, 2026
Friday, July 10, 2026
Monday, July 6, 2026
Monday, June 29, 2026
Monday, June 22, 2026
Thursday, June 18, 2026
Wednesday, June 17, 2026
Monday, June 8, 2026
Wednesday, June 3, 2026
Monday, May 18, 2026
Monday, May 11, 2026
Monday, May 4, 2026
Monday, April 27, 2026
Saturday, April 25, 2026
விஜய் ஒரு ஆபத்தான மாயை!சுவி. பாபு T தாமஸ்
விஜய் ஒரு ஆபத்தான மாயை!
விஜய் ஒரு ஆபத்தான மாயை!
தமிழ் நாட்டு மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் பழங்காலம் தொட்டு வழிவழியாக தங்கள் தலைவரை தெரிந்தெடுப்பதில் அல்லது அவர் பால் ஈடுபாடு கொள்ளுவதில் அடிப்படை இல்லாதவர்களாக இருந்து வந்துள்ளனர். சிலரை நமக்கு பார்த்தவுடன் பிடித்து விடும் அல்லது பிடிக்காமலும் போகும் இது ஒரு உளவியல் நியதி. ஒருவருக்கு ஒருவர் மீது நல்ல அபிப்பிராயம் வருவதற்கும், வராமல் போவதற்கும் காரணம் எதுவும் தேவையேயில்லை. ஆனால் ஒருவரின் தலைமையை நாம் ஏற்கிறோம் என்று சொன்னால் ஒருவருடைய குணமும், பண்புகளும் மிகமிக அவசியமாகிறது. இதை தான் உளவியல் ரீதியாக தலைமை பண்பு என்று சொல்லுகிறோம். இந்த தலைமை பண்பிற்கு உதாரண புருஷர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆணடவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷரோடு கூட பஸ்காவை (Pass Over) ஆசாரிக்க விரும்பி அதற்காக தகுதியான இடம் ஆயத்தமாக்கப் பட்டது. அப்பொழுது இயேசு, போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். யோவான் : 13 : 4 - 5 மற்றும் நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் : 13 : 15. இப்படியாக தலைமை பண்பிற்கான இலக்கணத்தை பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது கவனியுங்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். மத்தேயு : 20 : 26 - 28.
இது தான் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமென்றோ அல்லது நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய தலைவனுக்குரிய பண்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படையில் மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் காலாகாலமாக தமிழர்களாகிய நாம் இழந்தது ஏராளம். போகட்டும் நவநாகரீகத்தில், கல்வியறிவில் முன்னேறியிருக்கிற இக்காலத்திலாகிலும் மக்கள் மாற்றம் அடைந்தார்களா என்றால், இல்லை என்பதே உண்மையாகும். விஜய் எனும் நடிகர் ஒருவர் நல்ல நடிகராக இருந்து புகழின் உச்சிக்கு சென்று அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பி பொது வாழ்விற்கு வந்திருக்கிறார். நல்லது வரவேற்க வேண்டிய அம்சம்தான். ஆனால் மக்களில் ஒரு சாரார் அதிலும் குறிப்பாக வாலிபப் பிள்ளைகள் விஜய்யின் வருகையால் புளங்காகிதம் கொண்டுத் திரிவது அச்சுறுத்தலையும், ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒருவர் பால் சார்பாக இருப்பது தவறில்லை மாறாக எந்த எந்த அடிப்படையில் ஒருவர் பால் நம்பிக்கை வைக்கிறோம் என்பது முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிச்சலில் 41 பேர் அகால மரணம் அடைத்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் உறவுகள் எச்சரித்தும் அலட்சிய மனப்பான்மை காரணமாக தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் என்பது நிதர்சனம். இத்துணை பெரிய ஆபத்துக்கு அப்புறமும் இளைய சமுதாயத்தினர் விஜய் மீது ஈடுபாடோடு இருப்பது நமக்கெல்லாம் ஆபத்தையே உணர்த்துகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் விஜய் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் அனைவருக்கும் விஜய்யின் சினிமா நடிப்பை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது அல்லது தெரியவில்லை என்பது தான் நம்மை பொறுத்த வரையில் அச்சுறுத்தலின் உச்சம். நம்மை வழிநடத்த நாம் ஒருவர் பால் நம்பிக்கை கொள்ளுகிறோம் என்றால், அவர் குறைத்த பட்ச உத்தரவாதத்தையும், நம்பிக்கையும் அளிக்கவேண்டும். ஆனால் அவரை நம்பும் so called இளைஞர்களின் வாதமெல்லாம் ஆட்சி பொறுப்பை கொடுப்போம் என்பதே!
Evg.Babu T Thomas
Our Shepherd's Voice Foundation - Ranipet - 632 401.
Subscribe to:
Posts (Atom)
-
யார் எனக்கு தலைவன்! கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ஒட்டு மொத்த அறிவு சார் சமூகத்துக்கும் வளர்ந்த நவ நாகரிக சமூகத்திற்கும் ஒரு கருப்பு ...
-
பேராசையில் விளைந்த பெரும் வினை! Karur human stampede was a tragedy due to human rights violation. நம் எல்லோருக்கும் பொன் முட்டையிடும் வாத்...





