Thursday, November 9, 2023

Sin is Couching - பாவம் படுத்திருக்கும் - Evg.Babu T Thomas - Our Shephe...

Selfgiving Love - தன்னையே தரும் அன்பு - Evg.Babu T Thomas, Our Shepherd'...

Say Yes to yes - உள்ளதை உள்ளதென்று சொல் - Evg.Babu T Thomas - Our Shephe...

Anointing - அபிஷேகம் - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundatio...

நிசேயா விசுவாசப் பிரமாணம்!

 நிசேயா விசுவாசப் பிரமாணம்!

வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும், காணப்படாததுமான

எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வ வல்லமையுள்ள 

பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், 

 தேவனுடைய ஒரே பேறான குமரனுமாயிருக்கிற, இயேசு 

கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும் 

உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப் பட்டவர். 

தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர்,  மெய்த் 

தேவனில் மெய்த் தேவனானவர், உண்டாக்கப் படாமல் 

ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், 

சகலத்தையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும், நமக்கு 

இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கிப் பரிசுத்த 

ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து, மனிதனானார். 

நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில், சிலுவையில் 

அறையுண்டு, பாடு பட்டு, அடக்கம்பண்ணப்பட்டார், வேத 

வாக்கியங்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 

உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க, 

மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை. 

கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் 

நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது 

தோத்திரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவரு

மாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த 

பொதுவான அப்போஸ்தலத் திருசபை உண்டென்று விசுவாசிக்கிறேன். 

பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை 

அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய 

ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன், ஆமென்.           

      

Israel - இஸ்ரவேல் - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation- ...

Beer-la'hai-roi - லகாய்ரோயீ - Evg.Babu T Thomas - Our Shepherd's Voice F...

Jesus Christ!