Saturday, November 11, 2023

பத்துக் கற்பனைகள்!

 கடவுள் திருவுளம்பற்றிச் சொல்லிய வார்த்தைகள் 

1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஈழயம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

6. கொலை செய்யாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.  

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

8. களவு செய்யாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

9. பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

10. இச்சியாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும்   எங்கள் இருதயத்தில் பதித்தருள வேண்டும்மென்று வேண்டிக்கொள்ளுகிறோம்.  

No comments:

Post a Comment