Monday, February 2, 2026

கிறிஸ்தவ சமூதாய மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி! சுவி. பாபு T தாமஸ்

 


கிறிஸ்தவ சமூதாய மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி!
சுவி. பாபு T தாமஸ்

அவமானம்! அவமானம்!! மிகப்பெரிய அவமானம்!!!
நமக்கெல்லாம் திருச்சபைகள் எதற்கு? வெறுமனே செத்தவனை அடக்கம் பண்ணுவதற்கும், அவனை சமாதி செய்வதற்குமா? திருச்சபைகள். கோவையில் ஒரு அவமானம் அரங்கேறி இருக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள் திருச்சபை மக்களே! கோவை பெரியநாயக்கன் பகுதியை சேர்ந்த இளநிலை பொறியாளர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய திரு கமலேஷ், அவரது துணைவியார் Staff Nurse ஆகா பணியாற்றிய இலக்கியா தம்பதியர் இருவரும் அவர்களது பத்து வயது நிரம்பிய பெண் பிள்ளையும் ஆகியோர் தற்கொலை செய்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளுவதற்கு முன் அப்பகுதியில் உள்ள CSI கிறிஸ்து நாதர் ஆலய கல்லறை செலவினங்களுக்காக ரூ. 50,000 /- செலுத்தி இருக்கிறார்கள். அதே போல தங்கள் சுய வாக்கு மூலமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதில் தங்கள் உடல்களை CSI கிறிஸ்து நாதர் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு காரணமாக அவர்கள் தெரிவிப்பது சகோதரி இலக்கியா அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் ஒரு திருச்சபையாக நாம் நமது கடமையிலிருந்து தவறி இருக்கிறோம் என்பதே உண்மை . நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் ஆகாத காரியம் ஒன்று உண்டா? மருந்து மாத்திரைகளால் முடியாத நோய்கள் எதுவானாலும் மக்களின் இறுதி தேர்வாக இருப்பது நம்முடைய ஆண்டவர் மட்டுமே. அப்படியிருக்கும் பொழுது மூன்று அருமையான உயிர்களை பறிகொடுத்திருக்கிறோமே இதற்கு யார் பொறுப்பு? இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். யோவான் : 11 : 4 மற்றும் அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் : 14 : 6 போன்ற ஜீவ வார்த்தைகளை நாம் அவமாக்கிவிட்டோமே என்பது மிகப் பெரிய வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறதா இருக்கிறது. தயவுக் கூர்ந்து கிறிஸ்துவ சமூகம் இதை கவனத்தில் கொள்ளவேண்டும், நன்றி.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment