621. என்னை உயிரோடு காத்தீரே உமக்கு ஸ்தோத்திரம்
622. என் தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் சேர்த்துக் கொள்ளுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
623. என் இருதயத்தை ஸ்திரப் படுத்துகிற கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம்
624. நீர் என்னை கைத் தூக்கி எடுத்தப்படியால் உமக்கு ஸ்தோத்திரம்
625. உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம்
626. பயங்கரமான குழியினின்று என்னைத் தூக்கி விடுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
627. மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
628. என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப் பண்ணினீரே உமக்கு ஸ்தோத்திரம்
629. என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்கு தப்புவித்தீர் ஸ்தோத்திரம்
630. என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்புவித்தீர் ஸ்தோத்திரம்
631. என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
632. என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்கிறவரே ஸ்தோத்திரம்
633. என் பாவங்கள் மூடப்பட்டதற்காக ஸ்தோத்திரம்
634. என் மீறுதலை மன்னித்தீரே ஸ்தோத்திரம்
635. என் அக்கிரமங்களை எண்ணாதிருக்கிறீரே ஸ்தோத்திரம்
636. என் பாவத்தின் தோஷத்தை நீக்கினீரே ஸ்தோத்திரம்
637. என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்கு பின்னாக எறிந்து விட்டதற்காக ஸ்தோத்திரம்
638. என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே ஸ்தோத்திரம்
639. என் பிராணனை ஆழிவுக்கு விலக்கி மீட்டிரே ஸ்தோத்திரம்
640. என்னை தமது கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டினதற்காக ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment