Thursday, November 2, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 641 - 660

641. புது எண்ணையால் என்னை அபிஷேகம் பண்ணுகிறீர ஸ்தோத்திரம் 

642. நன்மையால் என் வாயை திருப்தியாக்குகிறீர் ஸ்தோத்திரம் 

643. என் வாயில் தேவனை துதிக்கும் புதுப்  பாட்டை தந்தீர் ஸ்தோத்திரம் 

644. இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும்படி செய்கிறீர் ஸ்தோத்திரம்

645. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப் பண்ணினீர் ஸ்தோத்திரம் 

646. என் இரட்டை களைந்துப் போட்டு மகிழ்ச்சியெனும் கட்டினால் இடைக்கட்டினீர் ஸ்தோத்திரம் 

647. அன்பின் கயிறுகளால் என்னை கட்டி இழுப்பவரே ஸ்தோத்திரம் 

648. என் மேல் நினைவாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

649. என்னை ஏற்றுக் கொள்பவரே ஸ்தோத்திரம் 

650. என்னை ஆதரிப்பவரே ஸ்தோத்திரம் 

651. தேவரீர் என் பட்சத்திலிருக்கிறீர் ஸ்தோத்திரம் 

652. பயங்கரமான பாராக்கிரமசாலியாய் என்னோடிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 

653. என்னுடைய எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டவரே ஸ்தோத்திரம் 

654. என் இருதயத்தின் வேண்டுதல்களை எனக்கு அருள் செய்பவரே ஸ்தோத்திரம் 

655. உமது இடதுகை என் தலையின் கீழ் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

656. உமது வலது கரம் என்னை அணைத்துக் கொள்வதற்காய் ஸ்தோத்திரம் 

657. உமது வலது கரம் நீதியால் நிறைந்திருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

658. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுபவரே ஸ்தோத்திரம் 

659. நீதியை பேசி யதார்த்தமானவைகளை அறிவிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 

660. என் நீதியை வெளிச்சத்தை போலவும் என் நியாயத்தை பட்டப் பகலை போலவும் விளங்கப் பண்ணுவீர் ஸ்தோத்திரம்         

No comments:

Post a Comment