Saturday, November 4, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 781 - 800

781. உம்முடைய இரக்கங்கள் மகா பெரியது ஸ்தோத்திரம் 

782. உமது கிருபை பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம் 

783. பகற் காலத்தில் உம் கிருபையை கட்டளையிடுவதற்காக ஸ்தோத்திரம் 

784. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது, ஆகவே ஸ்தோத்திரம் 

785. கிருபையையும் மகிமையையும் அருள்பவரே ஸ்தோத்திரம் 

786. தேவனே உமது கிருபை எவ்வளவு அருமையானது ஸ்தோத்திரம் 

787. தேவனே உமது கிருபை என்றுமுள்ளது ஸ்தோத்திரம் 

788. நாங்கள் நிர்மூலமாகாமலிருப்பது உம் சுத்த கிருபையே ஸ்தோத்திரம் 

789. காலைதோறும் உம் கிருபைகள் புதியாவைகளாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

790. கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிச் சூட்டுகிறவரே ஸ்தோத்திரம் 

791. தேவரீர் நீர் செய்த உபகாரங்களுக்காக ஸ்தோத்திரம் 

792. கர்த்தாவே நீர் மகிமையையும் கனத்தையும் அணிந்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம் 

793. நீர் பாராக்கிரமத்தை அணிந்து, அதை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம் 

794. ஒளியை வஸ்திரமாக தரித்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம் 

795. தம்முடைய தூதர்களை காற்றுக்களாகச் செய்பவரே ஸ்தோத்திரம் 

796. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம் 

797. பசியுள்ள ஆத்துமாவை நன்மையால் நிரப்புகிறவரே ஸ்தோத்திரம் 

798. தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம் 

799. கர்த்தாவே உமது வேதத்தில் உள்ள அதிசயங்களுக்காக ஸ்தோத்திரம் 

800. சிறுமையிலும் எனக்கு ஆறுதலாயிருந்த உம் வசனத்திற்காக ஸ்தோத்திரம்  

    


No comments:

Post a Comment

Holy Spirit!