Monday, November 6, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 801 - 820

801. உம் வசனத்தை நம்பச் செய்திரே ஸ்தோத்திரம் 

802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம் 

803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் ஸ்தோத்திரம் 

804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

805. உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளவர்களாக்குவதற்காக ஸ்தோத்திரம் 

806. மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம் 

807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

808. உம்முடைய வார்த்தைகள் உத்தமமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் ஸ்தோத்திரம் 

811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம் 

812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

813. உம்முடைய தயவு நீடிய வாழ்வு, ஆகவே ஸ்தோத்திரம் 

814. எப்பொழுதும் கடிந்துக் கொள்ளாதவரே உமக்கு ஸ்தோத்திரம் 

815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம் 

816. எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம் 

817. கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம் 

818. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்பங்களின்  தலையை  உடைத்தீர் ஸ்தோத்திரம் 

819. தேவரீர் முதலையின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்திரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம் 

820. ஊற்றையும், ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம்   

No comments:

Post a Comment

Jesus Christ!