Monday, November 6, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 821 - 840

821. மகா நதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம் 

822. ஆற்றை கால் நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

823. பகலிலே மேகத்தினாலும், இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனங்களை வனாந்திரத்தில் வழி நடத்தினீர் ஸ்தோத்திரம் 

824. கன்மலையை பிளந்து, ஜனங்களுக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்

825. மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம் 

826. தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம் 

827. பார்வோனையும், அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப் போட்டீரே ஸ்தோத்திரம் 

828. எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம் 

829. பெரிய ராஜாக்களையும், பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம் 

830. கழுதையின் வாயை திறந்தீர் ஸ்தோத்திரம் 

831. சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம் 

832. குடிகளுடைய பொல்லாபின் நிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

833. நீரூற்றுக்களை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

834. ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது ஸ்தோத்திரம் 

835. அவாந்திர வெளியை தண்ணீர் தாடகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

836. கன்மலையை தண்ணீர் தாடகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

837. கற்பாறையை நீருற்றாய் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

838. வறண்ட நிலத்தை நீருற்றுக்களாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

839. மலடியை சந்தோஷமான பிள்ளைத் தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம் 

840. நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்      


   

No comments:

Post a Comment