961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்ளுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
962. உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
963. மலைகள் விலகினாலும், பர்வதந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
964. என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாக விளங்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
965. இரட்டிப்பான நன்மையை தருவேன், அதை இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுப்படாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
968. ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
969. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
971. தேடுங்கள், அப்பொழுது கண்டடை வீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
973. இரண்டுப் பேராவது, மூன்றுப் பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடுக் கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
977. என் நீதியின் வலக்கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும் ஒருவனையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
980. நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment