Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 941 - 960

941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

943. அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும், கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

944. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழக்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

946. பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

947. உன் வழிகளிளெல்லாம் உன்னை காக்கும்படிக்கு, உனக்காய் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

948. உன் பாதம் கல்லில் இடறாதப்படிக்கு தம்முடைய தூதர்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

949. சிங்கத்தின் மேலும் விரீயன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும், வலுசர்பத்தையும் நீ மிதித்துப் போடுவாய் என்ற வாக்குதத்தத் திற்காக ஸ்தோத்திரம் 

950. என்னிடத்தில் ஆர்வமாய் இருக்கிறவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறப்படியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடு இருந்து அவனை தப்புவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

952. நீடித்த நாட்களால் அவனை திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காட்டுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்திரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

955. உனக்கு பாக்கியமும், நன்மையும் உண்டாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியை போல் இருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

957. உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக்  காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

960. உன் சந்ததி மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்               

No comments:

Post a Comment