Wednesday, October 22, 2025

முயற்சி - பயிற்சி! சுவி.பாபு T தாமஸ்

 


முயற்சி - பயிற்சி!

முயன்றால் மலையும் நமக்கு மடுவை போலத்தான் தெரியும். இது பொதுவாக எல்லாச் செயல்களுக்கும் பொருந்தக் கூடியதே. வாழ்க்கையில் வெற்றிப்பெற நினைக்கும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் முயற்சி - பயிற்சி ஆகும். அது சரி இங்கே நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அதி முக்கியமான வெற்றியின் ரகசியம் மூன்று 1. ஜெபம் 2. பரிசுத்த வேத தியானம் 3. ஓய்வு நாள் ஆசரிப்பு அல்லது ஆலயம் தவறாமை. இம்மூன்றும் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் பொதுவான மூன்று மூல மந்திரங்கலாகும். இதை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் தவறாமல் கடைப் பிடித்து வந்தால், அவரின் வாழ்க்கை ஏறுமுகமே. அதையும் மீறி அவருடைய வாழ்க்கையில் காணப்படும் சோதனைகள் யாவும் திருப்பு முனைக்கான யுக்தி அல்லாமல் வேறில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
1. ஜெபம் : இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். I தெசலோனிக்கேயர் : 5 : 17. இந்த இடைவிடாத ஜெபம் எப்படி இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரிவிப்பது என்னவெனில், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் : 4 : 6 அது மாத்திரமல்ல, நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு : 26 : 41. அப்படியானால் நாம் விழிப்போடு இருந்து ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஸ்தோத்திரங்களோடு கூட நாம் நம் ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நம்மை வலியுறுத்துகிறது. இவ்விதமான ஜெபங்களை மூன்று வகையில் நாம் ஏறெடுக்க முடியும். 1. தனி ஜெபமாக 2. குடும்ப ஜெபமாக 3. கூட்டுப்பிரார்த்தனையாக நாம் நம்முடைய வேண்டுதல்களை கர்த்தரிடத்தில் ஏறெடுக்க முடியும்.
2.பரிசுத்த வேதாகம தியானம் : கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1.2 நாம் பரிசுத்த வேதாகமத்தை தியானிப்பதற்கு ஒரு பிரதானமான நோக்கம் இருக்கிறது. பரிசுத்த வேதாகமம் நமக்கு வழிகாட்டி நூல் Guide Book / Rule Book என்று நாம் அதை கருத முடியும். ஏன் என்றுச் சொன்னால், உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் : 119 : 105 ஆகவே தான் வசனம் நமக்குச் சொல்லுகிறது, சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் : 8 : 32 அப்படியானால் நாம் வசனம் போதிக்கிறப்படி பாவத்தை தவிர்த்து, நீதிமான்களாக வாழப்பழக எத்தனிக்க வேண்டும். ஆகவே தான், . துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 1 - 2. எனவே தான் சங்கீதங்களின் புஸ்தகம் பாக்கியவானுக்குரிய தகுதியாக இரண்டு குறிப்புக்களை வெளிப்படுத்துகிறது.
3. ஓய்வு நாள் ஆசரிப்பு / ஆலயம் தவறாமை : சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரேயர் : 10 : 25 தேவனாகிய கர்த்தர், பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் : 2 : 18 . வசனம் நமக்கு அறிவுறுத்துகிறப்படி ஒவ்வொருவருக்கும் ஏற்ற துணையை கொடுத்து குடும்பங்களை உருவாக்கியிருக்கிறார். எனவே நாம் அனைவரும் குடும்பமாக ஆலயம் சென்று தேவனை தொழுவது மிக மிக அவசியம். நமக்கான ஆலோசனைகளை பரிசுத்த ஆவியானவர் எல்லோருக்கும் அருள்வார். ஆகா மேற்சொன்ன மூன்று முத்தான மந்திரங்களை மாறவாமல், தவறாமல் கைக்கொண்டு நடக்க நமக்கு முயற்சியும், பயிற்சியும் அவசியமாகிறது, ஆமென். நன்றி - வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu - South India.

No comments:

Post a Comment