Friday, November 14, 2025

தேவ ஆலயத்திற்கு போவோம்! சுவி.பாபு T தாமஸ்

 தேவ ஆலயத்திற்கு போவோம்! சுவி.பாபு T தாமஸ்

பிரியமானவர்களே,
சங்கீதக்காரன் தாவீது இப்படி சொல்லுகிறான், கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் : 122 : 1 ஆம் தேவ ஜனங்களே ஆலயத்திற்கு போவது என்பது மகிழ்ச்சியான விசேஷம் தான். எனக்கும் அப்படியே தான் ஆலயத்திற்கு போவதென்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமே. ஒவ்வொரு ஓய்வு நாளுக்கு மறுநாளாகிய திங்கட் கிழமை காலையில் எழுந்தவுடன் என் மனதில் தோன்றுவது இது தான். இன்று திங்கட் கிழமை, நாளை செவ்வாய் கிழமை, நாளை மறு தினம் புதன் கிழமை. இப்படியாக ஒவ்வொரு நாளும் யோசிப்பேன். இப்படி யோசிப்பதால் அடுத்த ஓய்வு நாள் இன்னும் ஆறு நாளில் வந்துவிடும். ஐந்து நாளில் வந்து விடும். நாலு நாளில் வந்து விடும் என்று அடுத்த ஓய்வு நாளை அதிகமாக வாஞ்சிப்பேன். உங்களில் எவ்வளவு பேர் ஆலயம் செல்லுவதை எப்படியெல்லாம் எதிர் பார்க்கிறீர்கள் என்று உங்கள் எண்ணங்களை தயவுக்கூர்ந்து பதிவிடுங்கள் பார்ப்போம். ஏன் நாம் ஆலயத்திற்கு செல்ல வாஞ்சிக்கவேண்டும். என்னதான் தேவனை நாம் நம் இல்லங்களில் தேடினாலும், அவருக்கான பிரத்தியேகமான ஸ்தலத்தில் நாம் அவரை தரிசிப்பது போல் வரவே வராது. அங்கே நம் உறவுகள், நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரும் ஒன்று கூடி ஆராதிக்கும் தருணம் போல் வருமா?

மாத்திரமல்ல தேவாலயங்களின் அழகே தனி தான். இன்னும் குறிப்பாக மெயின் லைன் திருச்சபைகள், பழமையான ஆலயங்களின் அலங்கார அமைப்புகளே தனி அலாதி தான். ஆல்டர் மேஜையும் அதன் மீது விரிக்கப்பட்டுள்ள விரிப்பு, அதன் மீதுள்ள பொருட்கள், அலங்கார விளக்குகள், பிரசங்க பிரத்தியேக மேடை, பரிசுத்த வேதாகமம் வைத்து வாசிக்க என்று பீடம், வெவ்வேறு இசையை தரும் வாத்தியக் கருவிகள் இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு பெரும் திரள் கூட்டமாய் சேர்ந்து பாடல்கள் பாடி ஆராதிப்பதில் இருக்கும் அழகும் கம்பிரமும் தனி அழகுதான். தேவனுடைய வேத வார்த்தைகள் வாசிக்கையில் கேட்பதில் ஒரு சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய வெளிப்பாடுகளை கேட்கும் பாக்கியமே பாக்கியம் தான். இதனால் தான் நாமும் ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும், எதிர்பார்போடும் ஆலயம் சென்று மகிழ்ச்சியை அனுபவிக்க கர்த்தர் அழைக்கிறார். நாமும் தவறாமல் ஆலயம் போவோம், ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment