521. தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்
522. உம்முடைய தயவினால் ஏழைகளை பாராமரிக்கிறதற்காக ஸ்தோத்திரம்
523. ஊழியக்காரர் மேல் பரிதாபப்படுகிறவரே ஸ்தோத்திரம்
524. ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிறவரே ஸ்தோத்திரம்
525. ஊழியக்காரரின் வார்த்தைகளை நிலைப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
526. ஊழியக்காரரை அக்கினி ஜுவாலையாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
527. தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக் கொள்ளுவதற்காக ஸ்தோத்திரம்
528. உமது சமூகத்தை ஊழியக்காரரின் மீது பிரகாசிக்கப் பண்ணுகிறரே ஸ்தோத்திரம்
529. நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப்படுத்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
530. நல்ல மனுஷன் விழுந்தாலும் தள்ளுண்டுப் போவதில்லையே, கர்த்தர் தமது கரங்களினால் அவனை தாங்குகிறீர் ஸ்தோத்திரம்
531. செம்மையான இருதய முள்ளவர்களை இரட்சிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
532. இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
533. நீதிமானை சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
534. நீதிமான்களுடைய சந்ததிகளோடு இருப்பவரே ஸ்தோத்திரம்
535. நீதிமான்களுடைய எல்லா உபத்திரவங்களிலிருந்தும் நீங்கலாக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
536. நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பவரே ஸ்தோத்திரம்
537. நீதிமான்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
538. நீதிமான்கள் கைவிடப்பட்டதில்லையே, அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதில்லையே ஸ்தோத்திரம்
539. நீதிமான்களை தாங்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
540. நீதிமான்களுக்கு உதவிச் செய்து விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment