661. என் பொருத்தனைகளை கேட்டதற்காய் ஸ்தோத்திரம்
662. என் ஜெபத்தை தள்ளாமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
663. தமது கிருபையை என்னை விட்டு விலக்காமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
664. கிருபையினால் என்னை சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
665. என் தாயின் வயிற்றில் என்னை சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
666. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்ட படியால் ஸ்தோத்திரம்
667. நான் உருவாக்கப்பட்ட போது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்க வில்லை ஸ்தோத்திரம்
668. என் கருவை உம் கண்கள் கண்டதே ஸ்தோத்திரம்
669. கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன் ஸ்தோத்திரம்
670. என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே ஸ்தோத்திரம்
671. என் சிறு வயது முதல் எனக்கு போதித்து வந்தீர் ஸ்தோத்திரம்
672. என் நோக்கம் நீரே கர்த்தாவே ஸ்தோத்திரம்
673. என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ஸ்தோத்திரம்
674. என் மேன்மையை பெருகப் பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர் ஸ்தோத்திரம்
675. உம்முடைய ஆலோசனையின் படி என்னை நடத்தி, முடிவில் என்னை மகிமையில் ஏற்றுக் கொள்ளுவீர் ஸ்தோத்திரம்
676. என் காலை தள்ளாட வொட்டீர் ஸ்தோத்திரம்
677. என்னை காக்கிறவர் உறங்கமாட்டீர் ஸ்தோத்திரம்
678. பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை சேதப்படுத்துவதில்லை ஸ்தோத்திரம்
679. கர்த்தர் என்னை எல்லா தீங்குக்கும் விலக்கிக் காப்பீர் ஸ்தோத்திரம்
680. கர்த்தர் என் ஆத்துமாவை காப்பீர் ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment