Thursday, November 2, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 681 - 700

681. என் போக்கையும் என் வரத்தையும் என்றென்றைக்கும் காப்பீர் ஸ்தோத்திரம் 

682. என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் ஸ்தோத்திரம் 

683. எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம் 

684. கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம் 

685. என் உட்காருதலையும், எழுந்திருக்குதலையும் அறிந்துக்கிறீர் ஸ்தோத்திரம் 

686. என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர் ஸ்தோத்திரம் 

687. என் நாவில் சொல் பிறவா முன்னே அதை நீர் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம் 

688. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர் ஸ்தோத்திரம் 

689. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என்னை உயிர்ப்பிப்பீர் ஸ்தோத்திரம் 

690. என் ஆவி என்னில் தியங்கும் போது என் பாதையை அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம் 

691. முற்புறத்திலும் பிற்புறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என் மேல் வைக்கிறீர் ஸ்தோத்திரம் 

692. என்னை வெகுவாய் தண்டித்தும் சாவுக்கு என்னை ஒப்புக் கொடாததற்காய் ஸ்தோத்திரம் 

693. விரோதிகளுடைய பற்க்களுக்கு எம்மை ஒப்புக் கொடாததற்காய் ஸ்தோத்திரம் 

694. நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறு உத்தரவு அருளினீர் ஸ்தோத்திரம் 

695. உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் அவைகளுக்காய் ஸ்தோத்திரம் 

696. என் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி, என்னிடத்தில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம் 

697. என் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக மாற்றுவதற்காய் ஸ்தோத்திரம் 

698. உச்சிதமான கோதுமையினால் என்னை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம் 

699. எங்கள் மனவிருப்பத்தின் படி எங்களுக்கு தந்தருள்பவரே ஸ்தோத்திரம் 

700. எங்களுடைய தாழ்வில் எங்களை நினைப்பவரே ஸ்தோத்திரம்      

No comments:

Post a Comment