Friday, November 3, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 701 - 720

701. என்னை நினைக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம் 

702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம் 

703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம் 

704. எங்களை உமது சமூகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம் 

705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம் 

706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி எங்களை இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம் 

707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம் 

708. எங்கள் சத்துருக்களின் நின்று இரட்சித்து, எங்களை பகைக்கிறவர்களை வெட்கப் படுத்துகிறீர் ஸ்தோத்திரம் 

709. வெள்ளியை புடமிடுவது போல எங்களை புடமிட்டீரே ஸ்தோத்திரம் 

710. எங்கள் நுகத்தடியை முறித்தக் கர்த்தரே ஸ்தோத்திரம் 

711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும், பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம் 

712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 

713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே ஸ்தோத்திரம் 

714. உமது அடியாரின் சந்ததி உமக்கு முன்பாக நிலைப் பெற்றிருக்கும் ஆகவே ஸ்தோத்திரம் 

715. உம்முடைய கிருபை உமக்கு பாய்ந்தவர்கள் மேலும் உம்முடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது ஆகவே ஸ்தோத்திரம் 

716. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ, உமக்கு பயப்படுகிறவர்கள் மேல் உம்முடைய கிருபையும் அவ்வளவு பெரிதாய் இருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

717. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல் கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறீர், ஆகவே ஸ்தோத்திரம் 

718. எங்களுடைய பாவங்களுக்கு தக்கதாய் சரிக் காட்டாமல் இருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

719. எங்களுடைய அக்கிரமங்களுக்கு தக்கதாய் எங்களை தண்டியாமல் இருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

720. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் எம்முடைய பாவங்களை எங்களை விட்டு விலக்கினதற்காய் ஸ்தோத்திரம்               

No comments:

Post a Comment