741. உண்மையானவனை தற்காப்பவரே ஸ்தோத்திரம்
742. இடும்புச் செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிக்கிறவரே ஸ்தோத்திரம்
743. இருதயங்களை உருவாக்கி செயல்களை எல்லாம் கவனிக்கிறவரே ஸ்தோத்திரம்
744. அவனவன் செய்கைக்குத் தக்கதாய் பலனளிக்கிறவரே ஸ்தோத்திரம்
745. தமக்கு பயந்தவர்களை சூழப் பாளயமிறங்கி விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
746. உமது நாமத்துக்கு பயப்படுகிறவர்களின் சுதந்திரத்தை எனக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம்
747. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
748. நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம்
749. நீரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
750. வல்லமை தேவனுடையது என விளம்பினீர் ஸ்தோத்திரம்
751. ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
752. மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
753. முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் தேவன் என்று அறிக்கைப் பண்ணும் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
754. கர்த்தாவே உமது கிரியைகளினால் பூமி திருப்தியாயிருக்கிறது ஸ்தோத்திரம்
755. பூமி உம்முடைய நன்மையினால் நிறைந்திருக்கிறது ஸ்தோத்திரம்
756. கர்த்தாவே நீர் பூமியின் ரூபத்தை புதிதாக்குகிறீர் ஸ்தோத்திரம்
757. தேவரீர், நீர் பூமியை விசாரித்து அதற்கு தண்ணீர் பாய்ச்சுகிறீர் ஸ்தோத்திரம்
758. தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் பூமியைச் செழிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்
759. பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்
760. பூமி உம்முடைய காருணியத்தால் நிறைந்திருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment