841. பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
842. காணாமற் போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம்
843. துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
844. நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
845. எலும்பு முறிந்ததை காயங் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
846. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம்
847. பெரு வெள்ளத்துக்கு புகலிடமே ஸ்தோத்திரம்
848. வறண்ட நிலத்துக்கு நீர் கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம்
849. விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையாய் இருப்பவரே ஸ்தோத்திரம்
850. குருடரின் கண்களைத் திறப்பவரே ஸ்தோத்திரம்
851. சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
852. சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணினீர் ஸ்தோத்திரம்
853. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
854. வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
855. எல்லார் மேலும் தயவுள்ளவரே ஸ்தோத்திரம்
856. எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
857. விதைக்கிறவனுக்கு விதையையும், பசித்திருக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
858. சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டிக்கிறவரே ஸ்தோத்திரம்
859. தமக்கு பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
860. தமக்கு பயந்தவர்களுடைய மன விருப்பத்தின்படி செய்கிறவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment