Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 861 - 880

861. தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம் 

862. தம்மில் அன்புக் கூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

863. கபடற்றவர்களை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

864. உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 

865. தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம் 

866. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம் 

867. வெண்கலக் கதவுகளை உடைப்பவரே ஸ்தோத்திரம் 

868. இரும்புத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம் 

869. அந்தகாரத்திலுள்ள பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் உள்ள புதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம் 

870. துரத்துண்ட இஸ்ரவேலரை கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம் 

871. பறந்து காக்கிற பட்சியைப் போல் எருசலேமின் மேல் ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம் 

872. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றி இருக்குமாப் போல், என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

873. எருசலேமைக் கட்டுகிறதற்காக ஸ்தோத்திரம் 

874. கர்த்தாவே, நீர் வீட்டைக் கட்டுகிறவர் ஸ்தோத்திரம் 

875. கர்த்தாவே, நீர் நகரத்தை காக்கிறவர் ஸ்தோத்திரம் 

876. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவது போல் எங்கள் சிறையிருப்பைத் திருப்புகிறவரே ஸ்தோத்திரம் 

877. துன்மார்க்கரின் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம் 

878. துன்மார்க்காரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம் 

879. துன்மார்க்கரை தரை மட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

880. துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்      

No comments:

Post a Comment

Jesus Christ!