Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 921 - 940

921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடிக்கனிமங்களுக்காக, எண்ணைய்  ஊற்றுக்களுக்காக, எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம் 

922. தண்ணீரை திராட்சரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்

923. பிறவிக் குருடர், செவிடர், ஊமையானவர்களை காணவும், கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம் 

924. மூடர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்புடையோர், திமிர்வாதக்காரர் அனைவரையும் சுகமாக்கினீர் ஸ்தோத்திரம் 

925. பிசாசின் வல்லமையில் பிடிப்பட்டோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம் 

926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம் 

927. மரித்த லாசரு, யாவீரின் மகள், நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீர் ஸ்தோத்திரம் 

928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம் 

929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம் 

930. உமது வார்த்தையின்படி ஆழத்திலே வலை போட்டப் போது திரளான  மீன்களும், வலப்பக்கத்திலே வலைப் போட்டப் போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்

931. வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும், பேதுருவின் மாமியையும், 38 வருஷமாய் வியாதியாய் இருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

933. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து திருப்தியாக்கி, மீதியானதை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

934. ஏழு அப்பம் மற்றும் சில சிறு மீன்களைக் கொண்டு நாலாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து மீதியானதை ஏழு கூடை நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஓட்ட வைத்தீர் ஸ்தோத்திரம் 

936. உம்மை கொல்ல நினைத்த மக்களிடமிருந்து நீர் அற்புதமாய் மறைந்துப் போனீர் ஸ்தோத்திரம் 

937. உம்மை பிடிக்க வந்த போர் சேவகர்களின் கூட்டத்தை பின்னிட்டு விழச் செய்தீர் ஸ்தோத்திரம் 

938. சந்திர ரோகியையும், நீர்க்கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

939. அத்தி மரம் உமது சாபத்தால் உடனே பட்டுப் போனது ஸ்தோத்திரம் 

940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை புதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான உம் அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்       

         

No comments:

Post a Comment