Thursday, November 9, 2023

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்!

 

விசுவாச அறிக்கை!

வானத்தையும் பூமியையும் படைத்த  சர்வ வல்லமையுள்ள 

பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். 

அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் 

இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். 

அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் 

உற்பவித்துப் பிறந்தார். 

பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் 

அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்.

மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார். 

பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய 

தேவனுடைய வலதுபாரிசத்திலே  வீற்றிருக்கிறார். 

அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும் 

நியாயந்தீர்க்க வருவார். 

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். 

பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய 

ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீரம் உயிர்த்தெழுதலும்,

நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்.      

  

Perish - அழிவு - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation - Ra...

பரமண்டல ஜெபம்!



ஆண்டவர் சொல்லித்தந்த ஜெபம்!

***************
பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 
உம்முடைய ராஜ்யம் வருவதாக, 
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது 
போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.  
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, 
எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 
எங்களைச் சோதனைக்குட் படப்பண்ணாமல், 
தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், 
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் 
உம்முடையவைகளே, ஆமென். 



Lord's Prayer!
********

Our Father who art in heaven,
Hallowed be thy name.
Thy kingdom come,
Thy will be done, on earth as it is in heaven.
Give us this day our daily bread.
And forgive us our debts, as we also have forgiven our debtors.
And lead us not into temptation, 
But deliver us from evil.
For thine is the kingdom, and the glory,
forever, Amen.   


Wednesday, November 8, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 981 - 1000

981. நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுகிறதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

982. நிச்சயமாக முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

985. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிச் சொல்லுதலுமில்லை என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

986. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

987. இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன, உன் மதில்கள் எப்பொழுதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

989. நீ தண்ணீர்களை கடக்கும் போது நான் உன்னுடன் இருப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

990 நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

994. நான் கர்த்தர், எனக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன், ஆயத்தம் பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

1000. இதோ, சீக்கிரமாக வருகிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்      

        

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 961 - 980

961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்ளுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

962. உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

963. மலைகள் விலகினாலும், பர்வதந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

964. என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாக விளங்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

965. இரட்டிப்பான நன்மையை தருவேன், அதை இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுப்படாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

968. ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

969. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

971. தேடுங்கள், அப்பொழுது கண்டடை வீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

973. இரண்டுப் பேராவது, மூன்றுப் பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடுக் கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

977. என் நீதியின் வலக்கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும் ஒருவனையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

980. நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்            

Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 941 - 960

941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

943. அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும், கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

944. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழக்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

946. பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

947. உன் வழிகளிளெல்லாம் உன்னை காக்கும்படிக்கு, உனக்காய் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

948. உன் பாதம் கல்லில் இடறாதப்படிக்கு தம்முடைய தூதர்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

949. சிங்கத்தின் மேலும் விரீயன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும், வலுசர்பத்தையும் நீ மிதித்துப் போடுவாய் என்ற வாக்குதத்தத் திற்காக ஸ்தோத்திரம் 

950. என்னிடத்தில் ஆர்வமாய் இருக்கிறவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறப்படியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடு இருந்து அவனை தப்புவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

952. நீடித்த நாட்களால் அவனை திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காட்டுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்திரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

955. உனக்கு பாக்கியமும், நன்மையும் உண்டாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியை போல் இருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

957. உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக்  காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

960. உன் சந்ததி மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்               

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 921 - 940

921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடிக்கனிமங்களுக்காக, எண்ணைய்  ஊற்றுக்களுக்காக, எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம் 

922. தண்ணீரை திராட்சரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்

923. பிறவிக் குருடர், செவிடர், ஊமையானவர்களை காணவும், கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம் 

924. மூடர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்புடையோர், திமிர்வாதக்காரர் அனைவரையும் சுகமாக்கினீர் ஸ்தோத்திரம் 

925. பிசாசின் வல்லமையில் பிடிப்பட்டோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம் 

926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம் 

927. மரித்த லாசரு, யாவீரின் மகள், நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீர் ஸ்தோத்திரம் 

928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம் 

929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம் 

930. உமது வார்த்தையின்படி ஆழத்திலே வலை போட்டப் போது திரளான  மீன்களும், வலப்பக்கத்திலே வலைப் போட்டப் போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்

931. வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும், பேதுருவின் மாமியையும், 38 வருஷமாய் வியாதியாய் இருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

933. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து திருப்தியாக்கி, மீதியானதை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

934. ஏழு அப்பம் மற்றும் சில சிறு மீன்களைக் கொண்டு நாலாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து மீதியானதை ஏழு கூடை நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஓட்ட வைத்தீர் ஸ்தோத்திரம் 

936. உம்மை கொல்ல நினைத்த மக்களிடமிருந்து நீர் அற்புதமாய் மறைந்துப் போனீர் ஸ்தோத்திரம் 

937. உம்மை பிடிக்க வந்த போர் சேவகர்களின் கூட்டத்தை பின்னிட்டு விழச் செய்தீர் ஸ்தோத்திரம் 

938. சந்திர ரோகியையும், நீர்க்கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

939. அத்தி மரம் உமது சாபத்தால் உடனே பட்டுப் போனது ஸ்தோத்திரம் 

940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை புதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான உம் அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்       

         

Jesus Christ!