Wednesday, November 29, 2023
Sunday, November 26, 2023
Saturday, November 25, 2023
தாழ்மையின் ஜெபம்!
தாழ்மையின் ஜெபம்!
இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுய நீதியை நம்பி, நாங்கள்
உம்முடைய பந்தியில் சேர துணியாமல், தேவரீருடைய அளவற்ற
இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும்
துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர்
அல்லர். ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ்செய்கிற
இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால்,
கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு
கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும், எங்கள்
பாவமுள்ள சரீரமும் ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள்
அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்ற
விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப்
பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.
முதலாம் சங்கீதம் சொல்லும் செய்தி!
முதலாம் சங்கீதம் - சுவி. பாபு T தாமஸ்
Friday, November 24, 2023
Tuesday, November 21, 2023
Wednesday, November 15, 2023
Tuesday, November 14, 2023
Monday, November 13, 2023
ஜாதிப் பெருமைகள் சாவது எப்போது? சுவி.பாபு T தாமஸ்
ஜாதிப் பெருமைகள் ஒழிவது எப்போது? சுவி.பாபு T தாமஸ்
நாமும் நமது ஆண்டவருக்கான ஊழியங்களும், மற்றும் பல சேவைகளும் எல்லாருக்குமானது என்று உணராத வரையில் நம்மால் ஆண்டவருக்கு மகிமையை சேர்க்க முடியாது. நாம் நமக்கு பேர் உண்டாகவா ஊழியம் செய்கிறோம். கிறிஸ்துவம் என்பது எல்லோருக்கும்மானது, இன்னும் குறிப்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் எல்லருக்குமானவர், ஆகவே தான் அவரிடத்தில் எந்த பேதமும், பாகுபாடுமில்லை. எல்லோரும் ஆண்டவருக்குள் ஒன்றாகவே இருக்கிறோம். வெறும் வார்த்தையில் அன்புக் கூறுவதல்ல கிறிஸ்துவ ஜீவியம், அவ்வாறே செய்கையிலும் காண்பிப்பது தான் கிறிஸ்துவை நாம் நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். பேருக்கும் புகழுக்கும் வாழ்வது வாழ்க்கையாகாது. நமது செய்கைகள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையையும் மகத்துவத்தையும் கொண்டு வரவேண்டும் என்பது தான் திருச் சபைகளின் நோக்கம். ஆனால் திருச் சபைகளோ ஜாதியை முன்னிறுத்துமானால் முடிவு அழிவு என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அந்த அழைப்பிதழில் Admin. Secretary, Finance Administrator, தலைமை ஆயர், உதவி ஆயர்கள், ஆலைய செயலர், பொருளர், பில்டிங் கமிட்டி கன்வீனர் மற்றும் DC, PC மெம்பர்கள் என்று ஏராளமானவர்கள் இருந்தும் இத்துணை பெரிய தவறு நடக்கிறது என்றால் ஒருவருக்கும் உணர்வு இல்லை என்றே பொருள். சமூதாய மீட்பிற்காக தேவன் திருச்சபைகளை நமக்கு தந்திருக்கிறார். திருச் சபையின் கடமையையும், பொறுப்பையும் நாம் தவற விடுவோமானால் அதற்கான ஆக்கினை தீர்ப்பு வரும் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருப்பது நல்லது. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொருபலி இனியிராமல்,நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரெயர்: 10 : 26 – 27. இந்தியா தேசமோ, இந்தியாவின் எந்த ஒரு மாநிலமோ, அம்மாநிலத்திலுள்ள மாவட்டமோ, தாலுக்காவோ, நகரமோ, கிராமமோ இந்த பாகுபாட்டில் மாறாமல் இருக்குமானால் அதற்கு கிறிஸ்துவை உடையவர்களாகிய நாமே பொறுப்பு. தேசம் அழிவின் பாதையில் பயணிக்கிறது என்றால் அதற்கும் நாமே பொறுப்பாளிகள் என்பதை உணர்வோம்.
சகோதர சகோதரிகளே நாம் நம் அழைப்பில் உறுதியாய் இருப்போம்! சாட்சியாய் நிற்ப்போம்!! தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்,
இராணிப்பேட்டை.
Saturday, November 11, 2023
பத்துக் கற்பனைகள்!
கடவுள் திருவுளம்பற்றிச் சொல்லிய வார்த்தைகள்
1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஈழயம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
8. களவு செய்யாதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
9. பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
10. இச்சியாதிருப்பாயாக.
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும் எங்கள் இருதயத்தில் பதித்தருள வேண்டும்மென்று வேண்டிக்கொள்ளுகிறோம்.
Thursday, November 9, 2023
நிசேயா விசுவாசப் பிரமாணம்!
நிசேயா விசுவாசப் பிரமாணம்!
வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும், காணப்படாததுமான
எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வ வல்லமையுள்ள
பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய்,
தேவனுடைய ஒரே பேறான குமரனுமாயிருக்கிற, இயேசு
கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும்
உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப் பட்டவர்.
தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்
தேவனில் மெய்த் தேவனானவர், உண்டாக்கப் படாமல்
ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர்,
சகலத்தையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும், நமக்கு
இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கிப் பரிசுத்த
ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து, மனிதனானார்.
நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில், சிலுவையில்
அறையுண்டு, பாடு பட்டு, அடக்கம்பண்ணப்பட்டார், வேத
வாக்கியங்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க,
மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும்
நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது
தோத்திரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவரு
மாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த
பொதுவான அப்போஸ்தலத் திருசபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.
பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை
அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய
ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன், ஆமென்.
அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்!
விசுவாச அறிக்கை!
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள
பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.
அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர்
இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.
அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில்
உற்பவித்துப் பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில்
அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்.
மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்.
பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய
தேவனுடைய வலதுபாரிசத்திலே வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும்
நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன்.
பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய
ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீரம் உயிர்த்தெழுதலும்,
நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்.
பரமண்டல ஜெபம்!
Wednesday, November 8, 2023
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 981 - 1000
981. நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுகிறதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
982. நிச்சயமாக முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
985. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிச் சொல்லுதலுமில்லை என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
986. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
987. இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன, உன் மதில்கள் எப்பொழுதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
989. நீ தண்ணீர்களை கடக்கும் போது நான் உன்னுடன் இருப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
990 நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
994. நான் கர்த்தர், எனக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன், ஆயத்தம் பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
1000. இதோ, சீக்கிரமாக வருகிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 961 - 980
961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்ளுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
962. உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
963. மலைகள் விலகினாலும், பர்வதந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
964. என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாக விளங்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
965. இரட்டிப்பான நன்மையை தருவேன், அதை இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுப்படாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
968. ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
969. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
971. தேடுங்கள், அப்பொழுது கண்டடை வீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
973. இரண்டுப் பேராவது, மூன்றுப் பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடுக் கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
977. என் நீதியின் வலக்கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும் ஒருவனையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
980. நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
Tuesday, November 7, 2023
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 941 - 960
941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
943. அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும், கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
944. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழக்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
946. பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
947. உன் வழிகளிளெல்லாம் உன்னை காக்கும்படிக்கு, உனக்காய் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
948. உன் பாதம் கல்லில் இடறாதப்படிக்கு தம்முடைய தூதர்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
949. சிங்கத்தின் மேலும் விரீயன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும், வலுசர்பத்தையும் நீ மிதித்துப் போடுவாய் என்ற வாக்குதத்தத் திற்காக ஸ்தோத்திரம்
950. என்னிடத்தில் ஆர்வமாய் இருக்கிறவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறப்படியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடு இருந்து அவனை தப்புவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
952. நீடித்த நாட்களால் அவனை திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காட்டுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்திரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
955. உனக்கு பாக்கியமும், நன்மையும் உண்டாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியை போல் இருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
957. உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
960. உன் சந்ததி மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 921 - 940
921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடிக்கனிமங்களுக்காக, எண்ணைய் ஊற்றுக்களுக்காக, எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம்
922. தண்ணீரை திராட்சரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்
923. பிறவிக் குருடர், செவிடர், ஊமையானவர்களை காணவும், கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம்
924. மூடர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்புடையோர், திமிர்வாதக்காரர் அனைவரையும் சுகமாக்கினீர் ஸ்தோத்திரம்
925. பிசாசின் வல்லமையில் பிடிப்பட்டோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம்
926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம்
927. மரித்த லாசரு, யாவீரின் மகள், நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீர் ஸ்தோத்திரம்
928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம்
929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம்
930. உமது வார்த்தையின்படி ஆழத்திலே வலை போட்டப் போது திரளான மீன்களும், வலப்பக்கத்திலே வலைப் போட்டப் போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்
931. வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும், பேதுருவின் மாமியையும், 38 வருஷமாய் வியாதியாய் இருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
933. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து திருப்தியாக்கி, மீதியானதை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
934. ஏழு அப்பம் மற்றும் சில சிறு மீன்களைக் கொண்டு நாலாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து மீதியானதை ஏழு கூடை நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஓட்ட வைத்தீர் ஸ்தோத்திரம்
936. உம்மை கொல்ல நினைத்த மக்களிடமிருந்து நீர் அற்புதமாய் மறைந்துப் போனீர் ஸ்தோத்திரம்
937. உம்மை பிடிக்க வந்த போர் சேவகர்களின் கூட்டத்தை பின்னிட்டு விழச் செய்தீர் ஸ்தோத்திரம்
938. சந்திர ரோகியையும், நீர்க்கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
939. அத்தி மரம் உமது சாபத்தால் உடனே பட்டுப் போனது ஸ்தோத்திரம்
940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை புதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான உம் அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்
.png)
.png)
.png)


.png)
.png)
.png)
.png)
.png)
.png)

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.jpeg)