Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 901 - 920

901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம் 

902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிச் செய்ய வல்லவரே ஸ்தோத்திரம் 

903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம் 

904. வழுவாதப்படி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம் 

905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்த வல்லவரே ஸ்தோத்திரம் 

906. உமது சமுகத்தின் இரட்சிப்பின் நிமித்தம் உமக்கு ஸ்தோத்திரம் 

907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம் 

908. மரணப் பரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 

909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும், ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 

911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 

912. ஆகாயவிரிவையும், சமுத்திரத்தையும், உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 

913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம் 

914. சூரிய, சந்திர, நட்சத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம் 

915. நீர் வாழும் மிருகங்கள், மீன்களுக்காய் ஸ்தோத்திரம் 

916. பறவைகள், வீட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகளுக்காக ஸ்தோத்திரம் 

917. மண்ணினாலே மனிதனை உருவாக்கி, ஜீவ சுவாசத்தைக் கொடுத்து, ஏற்ற துணையையும் கொடுத்தீரே ஸ்தோத்திரம் 

918. திட்டம் பண்ணின காலங்களுக்காக, மழைக்காக, பனிக்காக, வெயிலுக்காக, நீருற்றுக்காக ஸ்தோத்திரம் 

919. ஆறுகளுக்காக, ஓடைகளுக்காக, எரிகளுக்காக, குளங்களுக்காக, நீர்விழுச்சிகளுக்காக ஸ்தோத்திரம் 

920. மலைகளுக்காக, குன்றுகளுக்காக, மேடுகளுக்காக, பள்ளத்தாக்குகளுக்காக, சமபூமிகளுக்காக, பாலைவனங்களுக்காக, பனிப்பிரதேசங்களுக்காக ஸ்தோத்திரம்       

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 881 - 900

881. பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம் 

882. தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம் 

883. மன்னிக்கத் தயை பெருத்தவரே ஸ்தோத்திரம் 

884. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம் 

885. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம் 

886. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

887. பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம் 

888. தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம் 

889. நித்திய வழியிலே என்னை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 

890. காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

891. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

892. அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம் 

893. மனுஷனுக்கு அறிவைத் தருபவரே ஸ்தோத்திரம் 

894. உமக்கு பயப்படும் படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

895. உம்மிடத்தில் திரளான மீட்பு உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

896. மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம் 

897. ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம் 

898. சமுத்திரத்தின் மும்முரத்தையும், அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

899. ஜனங்களின் அமளியை அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

900. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபைச் செய்கிறவரே ஸ்தோத்திரம்  

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 861 - 880

861. தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம் 

862. தம்மில் அன்புக் கூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

863. கபடற்றவர்களை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

864. உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 

865. தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம் 

866. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம் 

867. வெண்கலக் கதவுகளை உடைப்பவரே ஸ்தோத்திரம் 

868. இரும்புத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம் 

869. அந்தகாரத்திலுள்ள பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் உள்ள புதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம் 

870. துரத்துண்ட இஸ்ரவேலரை கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம் 

871. பறந்து காக்கிற பட்சியைப் போல் எருசலேமின் மேல் ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம் 

872. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றி இருக்குமாப் போல், என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

873. எருசலேமைக் கட்டுகிறதற்காக ஸ்தோத்திரம் 

874. கர்த்தாவே, நீர் வீட்டைக் கட்டுகிறவர் ஸ்தோத்திரம் 

875. கர்த்தாவே, நீர் நகரத்தை காக்கிறவர் ஸ்தோத்திரம் 

876. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவது போல் எங்கள் சிறையிருப்பைத் திருப்புகிறவரே ஸ்தோத்திரம் 

877. துன்மார்க்கரின் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம் 

878. துன்மார்க்காரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம் 

879. துன்மார்க்கரை தரை மட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

880. துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்      

Monday, November 6, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 841 - 860

841. பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம் 

842. காணாமற் போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம் 

843. துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம் 

844. நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம் 

845. எலும்பு முறிந்ததை காயங் கட்டுகிறவரே ஸ்தோத்திரம் 

846. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம் 

847. பெரு வெள்ளத்துக்கு புகலிடமே ஸ்தோத்திரம் 

848. வறண்ட நிலத்துக்கு நீர் கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம் 

849. விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையாய் இருப்பவரே ஸ்தோத்திரம் 

850. குருடரின் கண்களைத் திறப்பவரே ஸ்தோத்திரம் 

851. சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம் 

852. சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணினீர் ஸ்தோத்திரம் 

853. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

854. வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

855. எல்லார் மேலும் தயவுள்ளவரே ஸ்தோத்திரம் 

856. எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

857. விதைக்கிறவனுக்கு விதையையும், பசித்திருக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

858. சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டிக்கிறவரே ஸ்தோத்திரம் 

859. தமக்கு பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

860. தமக்கு பயந்தவர்களுடைய மன விருப்பத்தின்படி செய்கிறவரே ஸ்தோத்திரம்     

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 821 - 840

821. மகா நதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம் 

822. ஆற்றை கால் நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

823. பகலிலே மேகத்தினாலும், இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனங்களை வனாந்திரத்தில் வழி நடத்தினீர் ஸ்தோத்திரம் 

824. கன்மலையை பிளந்து, ஜனங்களுக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்

825. மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம் 

826. தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம் 

827. பார்வோனையும், அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப் போட்டீரே ஸ்தோத்திரம் 

828. எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம் 

829. பெரிய ராஜாக்களையும், பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம் 

830. கழுதையின் வாயை திறந்தீர் ஸ்தோத்திரம் 

831. சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம் 

832. குடிகளுடைய பொல்லாபின் நிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

833. நீரூற்றுக்களை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

834. ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது ஸ்தோத்திரம் 

835. அவாந்திர வெளியை தண்ணீர் தாடகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

836. கன்மலையை தண்ணீர் தாடகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

837. கற்பாறையை நீருற்றாய் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

838. வறண்ட நிலத்தை நீருற்றுக்களாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

839. மலடியை சந்தோஷமான பிள்ளைத் தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம் 

840. நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்      


   

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 801 - 820

801. உம் வசனத்தை நம்பச் செய்திரே ஸ்தோத்திரம் 

802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம் 

803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் ஸ்தோத்திரம் 

804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

805. உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளவர்களாக்குவதற்காக ஸ்தோத்திரம் 

806. மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம் 

807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 

808. உம்முடைய வார்த்தைகள் உத்தமமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் ஸ்தோத்திரம் 

811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம் 

812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

813. உம்முடைய தயவு நீடிய வாழ்வு, ஆகவே ஸ்தோத்திரம் 

814. எப்பொழுதும் கடிந்துக் கொள்ளாதவரே உமக்கு ஸ்தோத்திரம் 

815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம் 

816. எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம் 

817. கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம் 

818. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்பங்களின்  தலையை  உடைத்தீர் ஸ்தோத்திரம் 

819. தேவரீர் முதலையின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்திரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம் 

820. ஊற்றையும், ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம்   

Jesus Christ!